சென்னையில் கோர தாண்டவமாடிய மாண்டஸ் புயல்! 700 கோடி ரூபாய் மதிப்பிலான சேதவிபரம் வெளியானது
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாண்டஸ் புயலால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லையெனவும்,சென்னை மீண்டுள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வங்க கடலில் தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் புயலாக வலுவடைந்து தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது.
இந்த புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதுடன்,மணிக்கு 15 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.
சேத விபரம் வெளியானது
இந்நிலையில், சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கணக்கீடு வெளியாகியுள்ளது.
புயல் காரணமாக சென்னையில் 400-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும், 200-க்கும் மேற்பட்ட மரக்கிளைகளும் விழுந்துள்ளதுடன், 150-க்கும் மேற்பட்ட தெரு மின் கம்பங்கள், 200-க்கும் மேற்பட்ட சாலைகள், 15-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன.
இதுவரை சென்னையில் 700 கோடி ரூபாய் சேதம் முதற்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளதுடன், மொத்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, பின்னர் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.