FIFA அமைப்பின் மீது சைபர் தாக்குதல்
சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ESPN அறிக்கையின்படி, FIFA-வின் மொத்த தரவுகளில் 0.1இற்கும் குறைவான தகவல்களே ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளன.
தனிப்பட்ட தரவுகளைத் திருடி வெளியிடுவது
FIFA ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக அணுகலைப் பெற்றே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Handsome Boy Hacking Club என்ற ஹேக்கர் குழு தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, FIFA கணினித் திரைப் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாக FIFA தெரிவித்துள்ளது.
மேலும், தனிப்பட்ட தரவுகளைத் திருடி வெளியிடுவது தனியுரிமைக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் FIFA எச்சரித்துள்ளது.
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri