ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (18) மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று (18) முற்பகல் 12.00 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதன் பின்னரே ரணிலுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலதிக தகவல் - திருமாள்






இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
