ஊரடங்கு சட்டம் அமுல் - வீதியில் மக்கள் நடமாட்டம்
கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறும் வகையில் சில பகுதிகளில் மக்கள் செயற்படுவதைக் காணமுடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பும் அதனால் ஏற்படும் இறப்பு வீதம் அதிகரித்துவரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மக்கள் இறுக்கமாக பின்பற்றுமாக சுகாதார பிரிவினரால் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு நகர் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மக்கள் அதிகளவில் நடமாடித் திரிவதைக் காணமுடிகின்றது. சிலர் முக்கவசம் இன்றியும் நடமாடித்திரிவதைக் காணமுடிகின்றது.
பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ச்சியாகச் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதிலும் அதனை மீறிய வகையில் மக்கள் செயற்படுவதைக் காணமுடிகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதன் காரணமாக இந்த செயற்பாடு அவர்களின் குடும்பத்தினதும் உறவினர்களினதும் குடும்பத்தினரது உயிரிழப்புக்கும் தொற்றுக்கும் காரணமாக அமையும் நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீட்டில் இருப்பதன் மூலமே இந்த கோவிட் தொற்றினைக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.










நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
