எதிரணிகளை அடக்குவதை விட்டு குற்றங்களைக் கட்டுப்படுத்துங்கள்! நாமல் எம்.பி
எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(24.7.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்தோடு, எதிரணிகளை அடக்குவதை விட்டு நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முறையான விசாரணை
எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் வலியுறுத்திய அவர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு மிக அவசியமானது என்று குறிப்பிட்ட அவர், அதற்கமைய தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி மட்டத்தில் புதிய இளைஞர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan