மன்னாரில் 60ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Ashik Oct 15, 2026 07:05 AM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் விவசாயிகள் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய நெல்லை பயிரிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட விவசாய குழு கூட்டம் நேற்று (14) மாலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. 

மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் , 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இக் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் விரிவாக ஆராயப்பட்டது.

கட்டுக்கரை குளம், ஏனைய மாகாண விவசாய குளம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களங்களுக்கு சொந்தமான குளங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய நிலப்பரப்புகளில் இக்கால போகப் பயிர் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

விவசாய நடவடிக்கை

காலபோக செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உர மானியம் வழங்கப்பட உள்ளது.எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, மன்னார் மாவட்ட விவசாயிகள் தங்கள் கமத்தொழில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டுக்கரை குளத்திற்கு ஏற்கனவே விவசாய இறுதி விதைப்பு திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 60ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை | Cultivation Across 60000 Acres Land Mannar

ஏனைய இடங்களை பொறுத்தவரை, கமநல சேவைகள் திணைக்களத்தினால் ஒவ்வொரு குளங்கள் மற்றும் குளங்கள் சார்பாக வெவ்வேறு விவசாயக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதற்கமைய, பயிற்சி செய்கை காலண்டர் அடிப்படையில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இந்த வருடம் எல் நினோ (El Nino) காலநிலை காரணமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் பின்பு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையிலான காலத்தில் நீண்ட வறட்சி நிலவுவதை எதிர் பார்ப்பதன் காரணமாக, நவம்பர், டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் அறுவடை நிறைவேற்றும் வகையில் மிகக் குறைந்த மாத நெல்லை விதைக்க விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்திற்குப் பின்பு வரும் வறட்சிக்கு முன்பதாக அறுவடையை மேற்கொள்ளக்கூடிய வகையில் இம்முறை பயிர்ச்செய்கை மன்னார் மாவட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவி ஆடைக்கான நீதி - கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்று கொழும்பில் நிறைவு

காவி ஆடைக்கான நீதி - கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்று கொழும்பில் நிறைவு

வர்த்தக நடவடிக்கைகள் 

இம்முறை காலபோக செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்ற ஏனைய வர்த்தக வங்கிகளில் கடன் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 60ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை | Cultivation Across 60000 Acres Land Mannar

இவற்றுள் காலபோக செய்கையில் ஈடு படும் விவசாயிகளுக்கு 5 வீதம் என்ற அடிப்படையிலும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கிகளில் விவசாயிகளை தங்களுக்குள் பிணையை பரிமாறி, அந்த விவசாயக் கடன் பெறுவதற்குரிய பிணையாளிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு கடன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தற்போது சிறுபோக அறுவடைகள் இடம்பெற்று முடிவடைந்துள்ள நிலையில்,இருக்கின்ற நெல்லை கொள்வனவு செய்வதற்காக 2 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கும், 6 தனியார் மில் உரிமையாளர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் 25 மில்லியன் வீதம் கடன் தொகையை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறித்தும்,அந்த குறிப்பிட்ட கடன் தொகையை அவர்கள் 8 மாதத்திற்குப் பின்பு மீள அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்த தனது சிறுபோக நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி நீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள்,நீர்ப்பாசனத் திணைக்களம்,மாகாண நீர்ப்பாசன திணைக்களம், மாகாண விவசாயத் திணைக்களம் , கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் , நெல் ஆராய்ச்சி உதவிப் பணிப்பாளர் , பிரதி விவசாயப் பணிப்பாளர்,கால்நடை அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர். 

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US