அநுரவை சந்தித்த இலங்கைக்கான கியூபத் தூதுவர்
இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido வுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (08) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
அரசியல் தொடர்புகள்
இதன்போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளரும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |