அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தோல்வியடைந்த நாடு ! ட்ரம்ப் சாடல்
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு.அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, "குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் கியூபா குறித்து என்னிடம் பேசியதில்லை.
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு.அது வீழ்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. தற்போது கியூபா அமெரிக்காவிடம் உதவி கோரி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பேசுவோம்.இதற்கிடையில், நான் சீனாவுக்குப் புறப்படுகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் உதவி
கியூபாவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மிகக் கடுமையாகச் சாடியுள்ள ட்ரம்ப், அந்த நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள அமெரிக்காவின் உதவி தேவை என்பதைத் தனது பாணியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபா விவகாரத்தில் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என்பதையும் அவர் தனது பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri