ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வாரம் 100 மில்லியன் பெரல் எண்ணெய் இழப்பு
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் இதே வேகத்தில் தொடர்ந்தால், சர்வதேச சந்தையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 100 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் இழப்பு ஏற்படும் என்று சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் எச்சரித்துள்ளார்.
தற்போது நிலவும் இந்த முடக்கம் இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், எண்ணெய் விநியோகம் சீரடைய அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நாளொன்றுக்கு சுமார் 70 கப்பல்கள் பயணிக்கும் நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 2 முதல் 5 ஆகச் சரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எரிசக்தி விநியோகம்
ஈரான் - அமெரிக்கப் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அராம்கோ தலைவரின் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இது சர்வதேச அளவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam