சுற்றுலா கப்பலில் பரவும் 'ஹான்டாவைரஸ்:இருவருக்கு தொற்று உறுதி
நெதர்லாந்து நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.வி. ஹோண்டியஸ்’ (MV Hondius) சொகுசு சுற்றுலா கப்பலில் பரவி வரும் ‘ஹான்டாவைரஸ்’ தொற்றால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் பல வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தக் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளில், ஒரு பிரான்ஸ் பெண்ணுக்கும் அமெரிக்கர் ஒருவருக்கும் தற்போது வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை கவலையோடு தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு
இந்த புதிய பாதிப்புகளையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 10 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றின் காரணமாக ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எலிகள் மூலம் பொதுவாகப் பரவக்கூடிய இந்த ஹான்டாவைரஸ், சில அரிதான நேரங்களில் மனிதர்களுக்கு இடையேயும் பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக முதியவர்களிடையே இதன் இறப்பு விகிதம் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காய்ச்சல், தலைவலி, குளிர் மற்றும் தீவிர சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க, கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் 42 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
ஸ்பெயினின் கேனரி தீவுகளில் முகாமிட்டுள்ள பயணிகளை அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துச் செல்லும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

அதே சமயம், இந்த வைரஸ் கொவிட்-19 அளவுக்கு வேகமாகப் பரவாது என்பதால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வைரஸ் சங்கிலியை உடைக்க முடியும் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam