அநுரவையும் விஜய்யையும் ஒப்பிடுவது தவறு!
இலங்கை ஜனாதிபதி அநுரவையும், தமிழக முதலமைச்சர் விஜய்யையும் ஒப்பிடுவது தவறு என சமூக செயற்பாட்டாளர் ஜனகன் விநாயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,விஜய் மூன்று வருடங்களுக்குள்ளேயே கட்சியை ஆரம்பித்து தமிழக முதலமைச்சர் பதவியை பெற்றிருப்பது என்பது வியக்கத்தக்கதாகும்.
அத்தோடு, புதிய மாற்றமொன்று அரசியல் வட்டாரத்திலும், அரசியல் கலாசாரத்திலும் உருவாக்கக் கூடிய இணைப்பு ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது.
உலகம் முழுவதும் இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது.அந்த அடிப்படையில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் வெற்றி புதிய அரசியல் கலாசரத்தை நோக்கி நகருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
அநுரவின் வெற்றியையும், விஜய்யின் வெற்றியையும் பலர் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.ஆனால் அதனை ஒப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri