தமிழகத்திற்கு ஒரு தளபதி! இலங்கை மக்களுக்கு பொய்களின் அதிபதி..
தமிழகத்தில் தளபதி விஜய் தேர்தலில் வெற்றியீட்டியது அந்த மாநில மக்களுக்கு அதிர்ஸ்டம் எனவும் இலங்கையில் பொய்களுக்கு அதிபதி ஆட்சி பீடம் ஏறியதனால் இந்த நாட்டு மக்களுக்கு துரதிஸ்டம் எனவும் மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக மாநில முதலமைச்சர் விஜய் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி பாராட்டியுள்ளது.
நேற்றைய தினம் பதவி பிரமாணம் செய்து கொண்ட விஜய் உடனடியாகவே மின்சார கட்டணங்களை குறைப்பதாக அறிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்டாலின் குரல் ஒலிக்காத சட்டசபை..! 39 ஆண்டு வரலாற்றில் சரிந்த திமுகவின் கோட்டை - அதிர்ச்சியில் தொண்டர்கள்
பொய்களின் அதிபதி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை சுட்டி காட்டியுள்ளார்.
தமிழகத்தில் தளபதி விஜய் போன்று இலங்கையில் எமக்கு இருப்பது பொய்களின் அதிபதி என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
தனது சகாக்களை கொண்டு கொள்கலன்களில் களவாடப்பட்டதாகவும், நிலக்கரியில் மோசடி செய்யப்பட்டதாகவும் திறைசேரியல் களவாடப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இங்குள்ள தலைவர் தனக்கு நெருக்கமானவர்கள் ஊடாக தனது சட்ட விரோதமான முறையில் வருமானத்தை குவிப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாளுக்கு நாள் மக்கள் மீது பொருளாதார சுமைகளை திணிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மின்சார கட்டணங்கள் நூற்றுக்கு 18 வீதம் அதிகரிப்பதன் ஊடாக இந்த நாட்டு மக்கள் தாங்கள் செலுத்தும் தேநீர், உணவுப் பொதி, பாண் உள்ளிட்ட அனைத்து நுகர்வு பொருட்களின் விலைகளும் உயர்வடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மின்சார கட்டண அதிகரிப்பானது இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் மறைமுகமான அடிப்படையில் பாதிப்பினை ஏற்படுத்தும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கபிலவின் மரணத்தின் பின்னணியிலுள்ள மர்மம் - முதலையின் பசிக்கு இரையாகும் நிலையா..! அதிர்ச்சியில் ராஜபக்சர்கள்
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri