ஸ்டாலின் குரல் ஒலிக்காத சட்டசபை..! 39 ஆண்டு வரலாற்றில் சரிந்த திமுகவின் கோட்டை - அதிர்ச்சியில் தொண்டர்கள்
தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தோல்வி பார்க்கப்படும் நிலையில் திமுகவினரை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டின் 17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11.05.2026) முதலமைச்சர் ஜோசப் விஜயின் பங்கேற்புடன் தொடங்கி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்று வருகின்றனர்.
39 ஆண்டுகளில் ஸ்டாலின் இல்லாத சட்டசபை
இந்நிலையில், 1989 முதல் 2026 வரையிலான கடந்த 39 ஆண்டுகளில் "ஸ்டாலின் இல்லாத சட்டசபை" என்ற நிலை உருவாகியிருப்பது திமுக தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனாக அரசியலுக்கு வந்த மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக முக்கியமான தலைவராக பார்க்கப்பட்டு வந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதன்முறையாக 1989ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்து பிறகு தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்று வந்த நிலையில், 1996, 2001, 2006 தேர்தல்களிலும் வெற்றி பெற்று தனது அரசியல் பலத்தை நிரூபித்துள்ளார்.
2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் கொளத்தூரில் வெற்றி பெற்றதால், அந்த தொகுதி திமுகவின் உறுதியான கோட்டையாகவே பார்க்கப்பட்ட நிலையில்,தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தமை அரசியல் பயணத்தில் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தோல்விக்கு காரணம்
கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட இந்த தோல்வி சாதாரண தேர்தல் தோல்வி அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தவெக போன்ற புதிய அரசியல் சக்திகளின் எழுச்சி, மக்கள் மனநிலையின் மாற்றம், எதிர்ப்பு அலை போன்ற பல காரணங்கள் இந்த தோல்விக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
39 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழக சட்டசபையில் இருந்த மு.க.ஸ்டாலின் இம்முறை இல்லாத நிலை திமுகவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"சட்டசபையில் ஸ்டாலின் குரல் ஒலிக்காத நிலை வந்துவிட்டதே" என்ற வருத்தத்தை திமுக தொண்டர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri