அதிரடியாக பதவி விலகிய பிரித்தானியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்!

United Kingdom World Keir Starmer
By Amal May 12, 2026 01:46 PM GMT
Report

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது  பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கடிதத்தில்,

"பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் பிரதமருடன் நான் பல ஆண்டுகளாக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன்.

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வாரம் 100 மில்லியன் பெரல் எண்ணெய் இழப்பு

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வாரம் 100 மில்லியன் பெரல் எண்ணெய் இழப்பு

பதவி விலகல்

இந்தச் சமூகச் சீர்கேட்டைச் சரிசெய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் பிரதமரிடம் இருப்பதை நான் அறிவேன். இருப்பினும், இந்தத் துறையில் உண்மையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் எப்போதுமே என்னால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்குப் பிறகே நிகழ்ந்தன," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழல்களைப் பயன்படுத்தி பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்க தான் முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடியாக பதவி விலகிய பிரித்தானியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்! | British Public Safety Mp Jess Phillips Resigns

பிரதமர் ஸ்டார்மரை நோக்கி நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ள அவர், "நீங்கள் அடிப்படையில் ஒரு நல்ல மனிதர், சரியான விஷயங்களில் அக்கறை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்.இருப்பினும், அது மட்டுமே போதுமானதல்ல என்பதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்.

எங்கே விவாதம் வந்துவிடுமோ என்ற அச்சத்தால் நாம் எந்தவொரு வாதத்தையும் முன்வைப்பதில்லை. இதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் முடங்கிப் போகின்றன," என்று சாடியுள்ளார்.

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி தடை

ஈரானின் 12 நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி தடை

பெரும் நெருக்கடி

கண்ணியமும் ஆர்வமும் அரசியலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குப் போராடும் குணமும் வேகமும் அவசியம் என்று ஜெஸ் பிலிப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள், வாதங்களை முன்வையுங்கள், மக்களை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். அரசியல் என்பது வெறும் கொள்கைகள் சார்ந்தது மட்டுமல்ல, அது மக்களின் உணர்வுகளோடும் தொடர்புடையது," என்று அவர் கூறியுள்ளார்.

அதிரடியாக பதவி விலகிய பிரித்தானியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர்! | British Public Safety Mp Jess Phillips Resigns

தொழிற்கட்சி அரசாங்கம் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் நாடும் தானும் எதிர்பார்த்த மாற்றங்கள் தற்போதைய தலைமையின் கீழ் நிகழவில்லை என்பதால், அமைச்சராகத் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

உள்ளூர் தேர்தல் தோல்வி மற்றும் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், ஒரு அமைச்சரின் இந்த பகிரங்கமான விமர்சனங்களுடன் கூடிய பதவி விலகல் பிரதமர் கீர் ஸ்டார்மருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் - ஜீ ஜின்பிங் சந்திப்பு: ஈரான் போர் விவகாரத்தில் வெடிக்கப்போகும் காரசார விவாதங்கள்!

ட்ரம்ப் - ஜீ ஜின்பிங் சந்திப்பு: ஈரான் போர் விவகாரத்தில் வெடிக்கப்போகும் காரசார விவாதங்கள்!

8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US