கியூபாவில் 500% உயரும் எரிபொருள் விலை
எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இவ்விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.
அத்துடன் அந்நாட்டின் மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மோசமான பொருளாதார நெருக்கடி
1990க்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகின்ற நிலையில் இவ்விலை அதிகரிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவுசெய்துள்ளது.
25 கியூபா பேசோவில் இருந்த விலை 132 கியூபா பேசோவாக உயர்கின்றது. இது இலங்கை மதிப்பில் ஒரு லிட்டர் 1768.63 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
