தொடருந்து பருவ சீட்டுகளில் பேருந்து பயணம்! வெளியான விசேட அறிவிப்பு
தொடருந்து பருவகால பயணச்சீட்டுகளை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் பயன்படுத்தலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
'டித்வா' சூறாவளி காரணமாக தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு சில குறிப்பிட்ட சேவைகள் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தொடருந்து சேவைகள்
தொடருந்து பருவகால பயணச்சீட்டுகள் உள்ள பயணிகள் தற்காலிகமாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

தொடருந்து சேவைகள் வழமைக்கு வரும் வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்கும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரட்ன தெரிவித்தார்.
இருப்பினும், இந்த அனுமதி இலங்கை போக்குவரத்து சபையின் சொகுசு பேருந்து சேவைகளுக்கு பொருந்தாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.