IPL கிண்ணத்தை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
2023 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் போட்டி தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர் நிறைவில் 05 ஆட்டமிழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றியின் ஊடாக ஐந்தாவது முறையாக IPL கிரிக்கெட் போட்டி தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.
?? ??? ????!
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
Two shots of excellence and composure!
Finishing in style, the Ravindra Jadeja way ?#TATAIPL | #Final | #CSKvGT pic.twitter.com/EbJPBGGGFu
நான்காம் இணைப்பு
சென்னை சூப்பர் கிங் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் IPL இறுதி போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டமையால் சென்னை அணிக்கு தற்போது 15 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Lightning fast MSD! ⚡️ ⚡️
— IndianPremierLeague (@IPL) May 29, 2023
How about that for a glovework ? ?
Big breakthrough for @ChennaiIPL as @imjadeja strikes! ? ?#GT lose Shubman Gill.
Follow the match ▶️ https://t.co/WsYLvLrRhp #TATAIPL | #Final | #CSKvGT | @msdhoni pic.twitter.com/iaaPHQFNsy
மூன்றாம் இணைப்பு
இதனால் மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கினால் நிச்சயமாக ஓவர்கள் குறைக்கப்படும்.
அப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டால் டி.எல்.எஸ் விதிப்படி வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் ஐந்து ஓவர்கள் முடிவடைந்த நிலையில் சென்னை அணி விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இருந்தால் 43 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதுவே ஒரு விக்கெட் இழந்தால் 49 ஓட்டங்கள் ஆகவும், இரண்டு விக்கெட் இழந்தால் 56 ஓட்டங்கள் ஆகவும், மூன்று விக்கெட்டுகள் இழந்தால் 65 ஓட்டங்கள் ஆகவும் வெற்றி இலக்கு இருக்கும்.
சென்னை அணிக்கு சாதகமான சூழல்
இதேவேளை 10 ஓவர் முடிவின்படி சென்னை அணி 91 ஓட்டங்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இதேபோன்று ஒரு விக்கெட் இழந்தால் 94 ஓட்டங்களும், இரண்டு விக்கெட் இழந்தால் 98 ஓட்டங்களும், மூன்று விக்கெட் இழந்தால் 102 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்கு மாற்றப்படும்.
இதேபோன்று 12 ஓவர் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 112 ஓட்டங்களும், ஒரு விக்கெட் இழந்திருந்தால் 114 ஓட்டங்கள் வெற்றி இலக்காவும், இரண்டு விக்கெட் இழந்திருந்தால் 117 ஓட்டங்கள் வெற்றி இலக்காவும், மூன்று விக்கெட் இழந்தால் 120 ஓட்டங்கள் வெற்று இலக்காகும் மாற்றி அமைக்கப்படும்.
இதனால் இரண்டாவது துடுப்பாட்டம் செய்யும்போது சென்னை அணிக்கு தற்போது சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆடுகளத்தில் பந்தும் சரியாக வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
சென்னை சூப்பர் கிங் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் IPL இறுதி போட்டி தற்போது மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
215 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளுக்கு 4 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட்,டெவோன் கான்வே ஆகியோர் துடுப்பாட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் போட்டியானது தொடர்ச்சியான மழை காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
முதலாம் இணைப்பு
அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் நடைபெறும் IPL இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 04 ஆட்டமிழப்புக்கு 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சென்னையின் இலக்கு
குஜராத் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் சிறந்த துடுப்பாட்டத்தை ஆரம்பித்து சென்னை இரசிகர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தினார்கள்.
மேலும் குஜராத் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 215 ஓட்டங்களை இலக்காக கொண்டு சென்னை அணி அடுத்து களமிறங்கவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |