சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸிற்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று

Thulsi
in விளையாட்டுReport this article
ஐ.பி.எல் 2023 தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்த இறுதிப்போட்டி இடைவிடாத மழை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி, ரிசர்வ் டே முறைப்படி இன்று (29.05.2023) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி இரத்து
நேற்று (28.05.2023) மாலை 7.30 மணியளவில் நாணய சுழற்சி இடம்பெற இருந்த நிலையில், கனமழை காரணமாக நாணய சுழற்சி ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் இரவு 9.30 மணிக்கு முன்னதாக மழை நின்றால் போட்டி 20 ஓவர்களுக்கு தொடரும் என்றும், இரவு 12 மணிக்குள் மழை நின்றால் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அகமதாபாத்தில் மழை முழுவதுமாக நிற்காத நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கிரிக்கெட் மைதானத்திற்கு போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் 74 ரூபாய்க்கு பல ஆயிரம் கோடி நிறுவனத்தை விற்ற தந்தை... அவரது மகனின் தற்போதைய நிலை News Lankasri
