சொந்த மைதானத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது சிஎஸ்கே
புதிய இணைப்பு
ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயசுழற்சியில் வென்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிதலைவர் அக்சர் படேல் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது.
டெல்லி அணி வெற்றி
அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ஓட்டங்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ஓட்டங்களும், சமீர் ரிஸ்வி 20 ஓட்டங்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களும் சேர்த்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 184 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.
ரச்சின் ரவீந்திரா, கோன்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ஓட்டங்களில் வெளியேறினார்.
கோன்வே 14 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ஓட்டங்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார்.
இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலாம் இணைப்பு
ஐபிஎல் தொடரில் இன்றையதினம்(5) 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டஸ் அணியும் மோதவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணி உள்ளூரில் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.
அடுத்த ஆட்டத்தில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்த போட்டியில் ராஜஸ்தானிடமும் தோல்வியை சந்தித்துள்ளது.
அதுமட்டுமல்லாது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
டெல்லி அணி
அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி(DC) தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியுடன் வெற்றிப்பெற்றுள்ளது.
அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியுடன் வெற்றிப்பெற்றுள்ளது.
துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் வலுவாக காணப்படும் டெல்லி அணி தனது மூன்றாவது வெற்றியை இலக்காக கொண்டு இன்றையதினம் விளையாடவுள்ளது.
நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் 19இல் சென்னையும், 11இல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
சேப்பாக்கத்தில் 9 முறை சந்தித்ததில் சென்னை அணி 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
2010ஆம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
