சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்.சி.பி. அணி..! ஒரே போட்டியில் நடந்த மாற்றம்
ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ரோயல் செலன்ஜர்ஸ் அணி படைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.
முதலிடம்
சென்னை அணிக்கு அடுத்த இடத்தில் ரோயல் செலன்ஜர்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இருந்தன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
அந்த வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை பின்தள்ளி ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணியாக ஆர்.சி.பி. உள்ளது.
இதேவேளை, எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
