அமெரிக்க வரி விதிப்பு! இந்தியாவின் ஆதரவு தொடர்பில் ரணில் வெளிப்படை
இந்தியாவுடன் எக்டா உடன்படிக்கையை அரசாங்கம் இறுதி செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் ஆடைகளை மாத்திரம் நம்பியிருக்க முடியாது என்றும், அமெரிக்க சந்தை முன்னர் போல காணப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய வரி
“இலங்கை அமெரிக்காவின் புதிய வரிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை இறுதி செய்வது அவசியம்.
சிங்கப்பூர் தாய்லாந்துடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செயற்படுத்த ஆரம்பிக்கவேண்டும்,அதேவேளை நாடு ஆர்சிஈபியின் அங்கத்துவத்தை தொடரவேண்டும்.
எட்கா உடன்படிக்கையை இறுதி செய்யவேண்டும்,2025க்கு முன்னர் அதனை இறுதி செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்.

ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி
அமெரிக்காவின் வர்த்தக கொள்கை
நாங்கள் அதனை முன்னெடுக்கவேண்டும். நாங்கள் அமெரிக்காவையும் ஏனைய நாடுகளையும் நம்பியிருந்தோம்.
ஆனால் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் எவ்வாறு உள்ளன என்பதை நீங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க சந்தைகள் முன்னர் போல திறந்தவையாக காணப்படாது. ஐரோப்பாவுடன் என்ன நடக்கும் என்பது தெரியாது. இதன் காரணமாக எட்கா உடன்படிக்கையை முதலில் பூர்த்தி செய்யவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |