சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
உலகச் சந்தையில் சில முக்கிய கச்சா எண்ணெய் வகைகளின் விலை 100 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 99.43 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், WTI வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 93.17 டொலர்களாகவும், மர்பன் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 96.20 டொலர்களாகவும் பதிவாகியுள்ளன.
வீழ்ச்சி
இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 2 சதவீத வீழ்ச்சியாகும்.
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.