பெண்களுக்கு எதிராக சைபர் குற்றங்கள் அதிகரிப்பு! அமைச்சர் வெளியிட்ட தகவல்
பெண்களுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07.05.2026) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் , 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற இந்த முறைப்பாடுகளில் சுமார் 2,300 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
விசாரணை
பெண்களுக்கு எதிராக 4,103 சைபர் குற்றப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 753 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3,348 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிடைக்கப்பெற்ற 3,159 முறைப்பாடுகளில் 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனைய 2,177 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து 4,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.