ஆங்கிலக் கால்வாய் வழி அத்துமீறல் : ஒரே நாளில் 781 அகதிகள் வருகை
ஆங்கிலக் கால்வாய் வழியாகச் சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளின் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டில் இல்லாத அளவாக ஒரே நாளில் 781-ஆகப் பதிவாகியுள்ளது.
புதன்கிழமை அன்று மட்டும் 10 சிறிய படகுகளில் இவர்கள் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 18,565 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வந்துள்ளனர். இது கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் குறைவாகும்.
படகுகளின் வருகையைக் குறைக்க
இதற்கிடையே, பிரான்ஸ் கடற்கரையில் இருந்து படகில் ஏற முயன்றபோது மாரடைப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதன்கிழமை வந்தடைந்தவர்களில் 51 பேரைக் கொண்ட ஒரு படகு, வழக்கத்திற்கு மாறாக நார்மண்டியில் இருந்து புறப்பட்டு 33 மணி நேரத்திற்கும் மேலாக கடலில் பயணித்து இங்கிலாந்தை அடைந்துள்ளது.
சிறிய படகுகளின் வருகையைக் குறைக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மனித கடத்தலை முழுமையாக ஒழிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து அந்த நாட்டு அரசியல் களத்தில் காரசார விவாதம் எழுந்துள்ளது.
மேலும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் அகதிகள் ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தியுள்ளதுடன், ரிஃபார்ம் யூகே கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் ராயல் கடற்படையைப் பயன்படுத்தி படகுகளைத் தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam