புத்தளம் - எலுவாங்குளத்தில் முதலைகள் நடமாட்டம்: மக்கள் அச்சம்
புத்தளம்(Puttalam) - எலுவாங்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தற்பொழுது அதிகளவிலான முதலைகள் சஞ்சரிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறித்த முதலைகள் ஆடு மாடுகளைத் தொடர்ந்தும் வேட்டையாடுவதாகவும் இதனால் தாம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களது கோரிக்கை
அத்துடன், குளத்தில் முதலைகள் சஞ்சரிப்பதாக எந்த ஒரு பதாதைகளும் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், வெளிப்பிரதேசங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் குறித்த குளத்தில் வான் பாயும் பகுதிக்கு குளிப்பதற்கு வருகைத் தருகின்றனர்.
இதன் காரணமாக, அந்த பகுதியில் குளிப்பதற்கு பாதுகாப்பு வலைகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 4 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam