வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம்! மூடப்பட்டது பிரதான விமான நிலையம்
அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாட்டின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊகடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவில் இன்று அடுத்தடுத்து 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மோரோன் பகுதிக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.1, 7.5 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
வெனிசுலாவில் சில நிமிட இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் தலைநகர் கராகஸில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததோடு, கரீபியன் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என கூறப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும், தொடர் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் யாரும் அவசரப்பட்டு தங்களது வீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், பொது இடங்களில் திறந்தவெளியில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.