உணவு தேடி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த முதலை (Photos)
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த முதலை ஒன்று திருகோணமலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு உப்பாறு பாலத்திற்கு கீழாக உள்ள ஆற்றுப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று குறித்த முதலை அடையாளங்காணப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் குறித்த முதலையானது மீட்கப்பட்டு மீண்டும் நீர் நிலையொன்றில் விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதலையானது அருகில் உள்ள ஏரியிலிருந்து உணவு தேடி பொலிஸ் நிலையத்திற்குள் வந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் மழை காரணமாக பரவலான காணிப்பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதால் அங்கு இவ்வாறான ஆபத்தான விலங்குகள் மறைந்திருக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்படுகின்றனர்.




தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
