ஜனாதிபதியின் செயல் வெறும் கண்துடைப்பு: எதிர்க்கட்சியின் விமர்சனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிஐடியிடம் ஒப்படைப்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சிஐடியிடம் ஒரு பொது ஆவணத்தை ஒப்படைப்பதால் எந்த நன்மையும் ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சட்டமா அதிபரிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து எதுவும் வெளிவரவில்லை.
முரண்பாடான கருத்துக்கள்
அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதை ஆயர் மாநாட்டிடம் ஒப்படைத்தார். எனவே ஜனாதிபதி திஸாநாயக்கவின் செயல் வெறும் கண்துடைப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதில் முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக ஒரு அமைச்சர் கூறியுள்ளார்.
இருப்பினும், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார். எனவே ஏன் இந்த முரண்பாடுகள் என்றும் காவிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri