பேச்சுவார்தைக்காக அமெரிக்கா சென்றுள்ள குழு: ஜனாதிபதி கூறிய தகவல்
அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதி நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று(20.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகை நாம் விரும்பியவாறு கட்டுப்படுத்த முடியாது என்பதோடு ஏனைய நாடுகளின் பொருளாதார தீர்மானங்களில் நாம் செல்வாக்கு செலுத்த முடியாது.
அசைக்க முடியாத ஒரு பொருளாதாரம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்ததும் அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது அவர் வரிகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இது போன்ற எந்தவித தடைகளாலும் அசைக்க முடியாத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கவே நாம் முயற்சிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri