டுபாயிலிருந்து வரும் உத்தரவிற்கு கொழும்பில் செயற்படும் குற்றக்கும்பல்: பொலிஸார் தீவிர விசாரணை
பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) இரவு தெஹிவளை நடைபாதை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 02 கிலோ 129 கிராம் கொக்கெய்ன், 22 கிராம் மண்டி, 08 கிராம் குஷ் மற்றும் 03 கிராம் ஹாஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர் பாமன்கடை பகுதியில் உள்ள வீடொன்றினை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் துபாயில் இருந்து நடத்தப்பட்டதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசேட நடவடிக்கை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, திட்டமிட்ட குற்றவாளிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மார்ச் 19 ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 804 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
