கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் பெண்கள்-குற்றப் பார்வை (Video)
நாட்டில் இவ்வாரத்தில் மாத்திரம் பல்வேறு குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இச்சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
இப் பெண்களில் பலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை
பதுளை ஹிங்குருகம கெலன்பில் தோட்டத்தில் நேற்று இரவு தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். முகத்தை மூடிய நிலையில் வந்த சிலரே இவர்களை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அதேபோல் தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாவெல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதைத்தவிர மதுபோதையில் தனது தாயுடன் தகராறு செய்தார் எனக் கூறப்படும் தனது தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மோசடி சம்பவங்கள்
சம்பவத்தில் 39 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 17 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல்வேறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.
பெண் ஒருவர் பொம்மை ஒன்றை குழந்தை போன்று சுற்றி வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் யாசகம் பெற்றுள்ளார். குழந்தைக்கு பால்மா பெற்றுக் கொடுப்பதற்கு வசதியில்லை என கூறி மக்களின் அனுதாபத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் போலி நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய இயந்திரத்துடன் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இக் குற்றச்சம்பவங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் எமது குற்றப் பார்வை இதோ.





ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
