இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரே எனது குழந்தையின் தந்தை: தொடரப்பட்டுள்ள வழக்கு
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சாமிக்க கருணாரட்னவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தனது குழந்தையின் தந்தை சாமிக்க கருணாரட்ன எனத் தெரிவித்து பெண் ஒருவரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனக்கும் சாமிக்க கருணாரட்னவிற்கும் பிறந்த குழந்தையை அவர் ஏற்க மறுப்பதாக குறித்த பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை
குழந்தையின் தந்தை சாமிக்க என்பதனை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதி செய்யக் கூடிய பரிசோதனைகளை செய்ய அனுமதி வழங்குமாறு குறித்த பெண் நீதிமன்றில் கோரியுள்ளார்.
ஆண் என்ற வகையில் குழந்தையின் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறித்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சாமிக்கவே எனது குழந்தையின் தந்தை, அவர் தனது பொறுப்பினை உதாசீனம் செய்த காரணத்தினால் நீதிமன்றில் வழக்குத் தொடர நேரிட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணைகளை சாமிக்க வேண்டுமென்றே தவிர்ப்பதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது குழந்தைக்கு இரண்டு மாதங்கள் எனவும் மரபணு பரிசோதனை மூலம் தந்தை யார் என்பதை கண்டறிய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.