தற்காலிக ஓய்விற்கு அனுமதி கோரியுள்ள இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி
இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அனுமதி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் போது, இவ்வருட உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்க இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்காலிக ஓய்வு பெற கோரிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில் விராட் கோலி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தென்னாப்பிரிக்க அணியுடன் ஒருநாள், ரி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 10 முதல் 21 வரை நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் சபையிடம் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டிசம்பர் 26ஆம் திகதி தொடங்கும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan