உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
ஒன்பதாவது உலகக்கிண்ண டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த தொடரை இம்முறை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
டி20 உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பப்புவா நியூ கினிக்கும் இடையிலானா போட்டி புரோவிடன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாணயசுழட்சி
குழு c யை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த போட்டியில் நாணயசுழட்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தடிய பப்புவா நியூ கினியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
போட்டியில் அந்த அணி சார்பில் செசி பவ் 43 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் கடக்க ஏனைய வீரர்களின் துடுப்பாட்டமானது 20 ஓட்டங்களுக்கு குறைவாகவே அமைந்திருந்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் பந்துவீச்சில் அன்றுஹ் ரசல் மற்றும் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள்அணிசார்பில், ஜோன்சன் சார்ள்ஸ், ப்றெண்டன் கிங், நிக்கலஸ் பூரன், ரோவ்மன் பவல் (தலைவர்), ஷிம்ரன் ஹெட்மயர், ஷேர்ஃபேன் ரதர்பர்ட், அண்ட்றே ரசல், அக்கீல் ஹொசெய்ன், அஸ்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், குடாகேஷ் மோட்டிஆகியோர் விளையாடியிருந்தனர்.
8ஆவது டி20 உலகக் கிண்ண தொடர்
மேலும், பப்புவா நியூ கினி அணி சார்பில் டோனி யூரா, செசி பவ், அஸாத் வாலா (தலைவர்), சார்ள்ஸ் அமினி, ஹிரி ஹிரி, கிப்லின் டோரிகா, நோமன் வனுஆ, அலெய் நாஓ, ஜோன் கரிக்கோ, சாத் சோப்பர் இடம்பிடித்திருந்தனர்.
கரிபியன் கிரிக்கட் ஜாம்பவான்கள் என வர்ணிக்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணியானது இலங்கையில் 2012ஆம் ஆண்டும் இந்தியாவில் 2016ஆம் ஆண்டும் டி20 உலக கிண்ண சம்பியன் பட்டங்களை தன்வசப்படுத்திய அணியாகும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற 7ஆவது தொடரில் சுப்பர் 12 சுற்றில் ஒரு வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியது.
அதன் பின்னர் அவுஸ்திரேலியாவில் 2022இல் நடைபெற்ற 8ஆவது டி20 உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளிடம் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் முதல் சுற்றுடன் வெளியேறியது.
எனினும் இம்முறை ரோவன் பவல் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் சொந்த மண்ணில் விளையாடுவதாலும் பலம்வாய்ந்த வீரர்களுடன் களம் இறங்குவதாலும் வெற்றிக்கு திரும்பும் என கிரிக்கட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
முன்னணி வீரர்கள் பலர் இல்லாமல் அண்மையில் இடம்பெற்ற டி20 போட்டி தொடரில் தென் ஆபிரிக்காவை 3 - 0 என வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
அண்ட்ரே ரசல், நிக்கலஸ் பூரன், ரோவ்மன் பவல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் தங்களது வழமையான அதிரடியை இந்த போட்டியில் வெளிப்படுத்தியிருந்தனர். பப்புவா நியூ கினி அணியில் சகலதுறை வீரர் சார்ள்ஸ் அமினி, டி20யில் சதம் கடந்த டோனி யூரா, அணித் தலைவர் அசாத் வாலா ஆகியோர் சிறந்த வீரர்களாக கருதப்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |