உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி
ஒன்பதாவது உலகக்கிண்ண t20 தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றுப்பெற்றுள்ளது.
இந்த தொடரை இம்முறை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இதன்படி, இன்றைய முதல் நாள் ஆட்டம் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இடம்பெற்றதோடு நாணயசுழற்சியில் வென்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கனடா அணி வீரர்கள் அதிரடியாக ஆடி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
கனடா அணி சார்பாக நவ்நீத் தலிவால் 61 ஓட்டங்களையும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
ஆட்டத்தின் இறுதி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் மொவ்வா 16 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனை தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்க அணி 17.4 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
அமெரிக்க அணி சார்பாக ஆண்டிரிஸ் கவுஸ் 46 பந்துகளில் 65 ஓட்டங்களையும் , ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு ஈட்டுச்சென்றனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒரு போட்டியாக இந்த போட்டி முதலில் கருதபட்டாலும் இரு அணி வீரர்களின் அதிரடி துடுப்பாட்டமானது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தனது முகப்பு பக்கத்தில் குறித்த சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
