உலக கிண்ண நியூசிலாந்து அணி அறிவிப்பு: வெளியாகிய நெகிழ்ச்சி காணொளி
நியூசிலாந்து குடும்ப உறுப்பினர்களை கொண்டு உலகக் கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள அழகான காணொளி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சி காணொளி
இந்த நிலையில் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH
— BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023
அந்த வகையில் இன்று நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்ட முறை தான் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொண்டு நியூசிலாந்து வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி
அந்த காணொளியில் கிரிக்கெட் வீரர்களின் மனைவி, குழந்தைகள், தாய் உள்ளிட்டோர் தங்கள் வீரரின் பெயரை கூறுகின்றனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் சபை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த காணொளி ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த முறை உலகக் கிண்ணத்தை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, இம்முறை இந்தியாவில் வெல்ல தயாராகியுள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேன் வில்லியம்சன் தலைவராக அணிக்கு திரும்பியுள்ளார்.
இதனால் டொம் லேதம் துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி விபரம்
கேன் வில்லியம்சன் (c), டாம் லாதம் டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ் , டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, மிட்செல் சான்ட்னர், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், வில் யங், மார்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திர, லாக்கி பெர்குசன், இஷ் சோதி, மாட் ஹென்றி.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
