உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலகக் கிண்ண தொடர்
உலகக் கிண்ண தொடருக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெறவில்லை. துணை தலைவராக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி -
1. ரோகித் சர்மா 2. சுப்மன் கில் 3. விராட் கோலி 4. ஸ்ரேயாஸ் அய்யர் 5. ஹர்திக் பாண்ட்யா 6. ஜடேஜா 7. குல்தீப் யாதவ் 8. முகமது சமி 9. முகமது சிராஜ் 10. பும்ரா 11. ஷர்துல் தாகூர் 12. சூர்யகுமார் யாதவ் 13. இஷான் கிஷன் 14. ராகுல் 15. அக்சர் படேல்.
Here's the #TeamIndia squad for the ICC Men's Cricket World Cup 2023 ?#CWC23 pic.twitter.com/EX7Njg2Tcv
— BCCI (@BCCI) September 5, 2023
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam