அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை வீரரை மீட்பதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இரண்டாவது பிணை விண்ணப்பம்
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் சட்டப்பிரிவின் முன்னாள் தலைவர் கலாநிதி சானக்க சேனாநாயக்க கூறுகையில், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை பெறுவதற்காக இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சட்டத்தரணிகள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
பிணை பெறுவதற்கான பணத்தைக் சேகரிப்பதில் தற்போது கிரிக்கெட் நிறுவனம் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது. சட்டத்தரணிகள் குழு வழக்கு விசாரணை இன்றி இதனை தீர்த்து வைக்க முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இரண்டாவது பிணைத் தொகையான அவுஸ்திரேலிய 200,000 டொலர்களை திரட்டுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) போராடி வருவதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் பிணை கோரி மேல்முறையீடு செய்வதற்காக மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஊடகமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை அல்லது தனுஷ்க குணதிலக்கவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அல்லது அறிக்கையை வெளியிடுவதற்கு, இலங்கையில் எந்தவொரு சட்டத்தரணியையும், தாம் அங்கீகரிக்கவோ அல்லது தக்கவைக்கவோ இல்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அறிவிப்பு
அறிக்கை ஒன்றின் மூலம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அண்மையில் சட்டத்தரணி ஒருவர், தனுஷ்க குணதிலக்க தொடர்பில் வெளியிட்ட அறிக்கைகள், குறித்த சட்டத்தரணி ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பாக கருத்து தெரிவிக்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனவே, குறித்த சட்டத்தரணியின் அத்தகைய அறிக்கைகள் அல்லது அவற்றின் உண்மைத் தன்மை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் எவ்வித பொறுப்பையும் கொண்டிருக்காது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
