மட்டக்களப்பில் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட கிரிக்கட் சங்கங்களுக்கு இன்று புதன்கிழமை(20) கிரிக்கட் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வு இன்றையதினம்(20.08.2025) இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்டுள்ளது.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் கொழும்பில் உள்ள டங்கன் வைட் அரங்கில் நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் உபகரணங்கள் வழங்கும் விழாவினையடுத்து மட்டக்களப்பு கிரிக்கட் சங்கம் கிழக்கு மாகாண கிரிக்கட் சங்கத்தின் தலைவர் எம்.பி. ரஞ்சன், செயலாளர் விவேகானந்தராஜா பிரதீபன் தலைமையில் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் அதிதிகள்
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரனும், அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சத்தியபிரியா வில்வரட்ணம், உதவி பிரதேச செயலாளர் சுபா சுதாகரன், பிரதான கணக்காய்வாளர் ஜ.எம்.நியாஸ், மற்றும் மட்டு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.ஜாவிட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
