இந்திய துணைத் தூதரக ஏற்பாட்டில் நடைபெற்ற கர்நாடக இசை கச்சேரி!
யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாவின் ஒரு பகுதியாக 2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி டாக்டர் நித்யாஶ்ரீ மகாதேவனால் நடத்தப்பட்ட பக்தி சார்ந்த கர்நாடக இசைக் கச்சேரியை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சி, யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் (JTCC) நடைபெற்றது.
இசைக் கச்சேரி
டாக்டர் நித்யாஶ்ரீயுடன் இந்தியாவிலிருந்து வந்த திறமையான கலைஞர்களின் இசைக் குழுவும் இணைந்து கச்சேரியில் பங்கேற்றது.
இந்த கச்சேரி நிறைந்த பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா காலத்தில் நிலவிய ஆன்மீகச் சூழலுடன் ஒத்திசைந்த இந்நிகழ்ச்சி, அனைவரின் உள்ளங்களிலும் ஆழமான பக்தி உணர்வை எழுப்பியது.
இந்த நிகழ்ச்சி இந்திய சாஸ்திரிய இசை மற்றும் பண்பாட்டு மரபின் கொண்டாட்டமாகவும், இந்தியா மற்றும் இலங்கையின் வட மாகாணத்திற்கிடையிலான ஆன்மீக மற்றும் பண்பாட்டு பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைந்தது.



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள் Manithan
