பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரின் உடனடியான செயற்பாடு
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட சோரன்பற்று கிராமத்தில் நீண்ட காலமாக வெள்ள அனர்த்த நிலை காணப்படுவதாக தவிசாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான தீர்வினை உடனடியாக பெற்று கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது வருடாந்தம் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களின் போது சோரன் பற்று கிராமத்தில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் குறித்த வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது மட்டுமே அதிகாரிகள் வருகை தந்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் பின்னர் அவற்றை கைவிட்டு சென்று விடுவதாகவும் இதனால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாகவும் கிராம மட்ட அமைப்புக்கள் பச்சிலைபள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர் சுப்ரமணியம் சுரேனிடம் தெரிவித்ததை தொடர்ந்து இதற்கான தீர்வினை கால அவகாசம் இல்லாமல் உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அடுத்து அனர்த்த முன்னாயத்த நிலைமைகளை கருத்தில் கொண்டு குறித்த பிரதேசத்தில் இருந்து வெள்ளம் வடிந்து ஓடக்கூடிய இடத்தை அடையாளப்படுத்தி அமைப்புகளுடன் சேர்ந்து பிரதேச சபை வடிகால அமைப்பு வசதியை மேற்கொண்டதோடு இவ்விடயங்களை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
அவருடன் சபையின் உபதவிசாளர் சிவகுரு செல்வராஜா மற்றும் கிராமமட்ட அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள் Manithan
