பிரதமருக்காக புதிய அமைச்சு உருவாக்கம்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்காக புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரத்தில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரத்தைக் கொண்டு இந்த அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் என்ற ஒர் புதிய அமைச்சு ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக முன்னேற்றம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைச்சு செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச வகித்து வந்த நிதி அமைச்சுப் பதவி, பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமைச்சராக மஹிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப்பிரமாணம்
பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்
கோட்டாபயவுக்கு அருகில் பசிலுக்கு ஆசனம்