பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்
நிதி அமைச்சரான பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னணியில் சற்று முன்னர் பசில் ரோஹன ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முன்னதாக பசில் ராஜபக்ச ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அநேகமான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வது வழமை என்ற போதிலும் பசில் ராஜபக்ச முதலில் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்த கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
