அமெரிக்காவுடன் விரிசல்: ஐரோப்பாவுடன் நெருக்கம் காட்டும் பிரித்தானியா
மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் போர் சூழலால் உலகளாவிய ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா இனி ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கொண்டிருப்பதில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து விடுத்து வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில் பிரித்தானியா இணைய மறுத்ததால், ஸ்டார்மரை "கோழை" என்றும், பிரித்தானியாவின் போர்க்கப்பல்களை "விளையாட்டுப் பொருட்கள்" என்றும் ட்ரம்ப் கடுமையாகச் சாடியிருந்தார்.
ஈரானிய ஆக்கிரமிப்பிலிருந்து இறுதியாக விடுபடும் நாள்! போரின் நிறைவு தருவாயில் அமெரிக்கா.. சற்றுமுன்னர் ட்ரம்பின் அறிவிப்பு
தற்காப்பு நடவடிக்கை
இதற்குப் பதிலளித்த ஸ்டார்மர், ட்ரம்பின் அழுத்தங்களுக்குப் பணிந்து தம்மால் போரில் ஈடுபட முடியாது என்றும், பிரித்தானியாவின் தேசிய நலன் கருதி ஐரோப்பிய நாடுகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்குவதே தற்போதைய இலக்கு என்றும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ட்ரம்ப் 2024-ல் மீண்டும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட ஸ்டார்மர் முயன்றார். ஆனால், ஈரான் போர் விவகாரத்தில் இரு நாட்டு உறவுகளும் பொதுவெளியில் விரிசலடைந்தன.
தொடக்கத்தில் பிரித்தானியாவின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி மறுத்த ஸ்டார்மர், பின்னர் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மட்டும் நிபந்தனையுடன் அனுமதி அளித்தார்.
போரின் தாக்கம்
தற்போது பிரெக்சிட் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு "இலட்சியபூர்வமான" மறுதொடக்கத்தை மேற்கொள்ள விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுச்சந்தை அல்லது சுங்க ஒன்றியத்தில் மீண்டும் இணையப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
போரின் தாக்கம் ஒரு தலைமுறைக்கு நீடிக்கும் என்று எச்சரித்துள்ள ஸ்டார்மர், இந்த இக்கட்டான சூழலில் ஐரோப்பாவே பிரித்தானியாவின் உண்மையான கூட்டாளி என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.