மிகவும் ஆபத்தாக மாறியுள்ள உலகின் கோவிட் நிலைமை! இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் ஒரு புறக்கணிக்கப்பட்ட சுகாதார தலைப்பாக மாறியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார அதிகாரிகளும், பொது மக்களும் இதில் குறைந்த கவனத்தையே செலுத்துகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கோவிட் தொற்றுகள் இன்னும் பரவலாக உள்ளன.
இலங்கையில் கோவிட் தொற்று
பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் குறித்த தளர்வான கொள்கைகளால் இலங்கையில் பெரிய அளவில் கோவிட் தொற்றுக்கள் பரவுகின்றன.
எனினும் கோவிட் பரவல் தொடர்பாக இலங்கையில் உரிய தரவுகள் இல்லை. சோதனைகளை செய்யத் தொடங்கினால், உண்மையைக் கண்டறிய முடியும்.
நாடுகளிடமிருந்து பெறப்படும் அதிகாரப்பூர்வ சான்றுகளின்படி, உலகின் கோவிட் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
புதிய சுகாதார மற்றும் பொருளாதார சவால்
ஜப்பானில் தினசரி சுமார் 200,000 புதிய கோவிட் நோய்த்தொற்றுகளும் 500 இறப்புக்களும் பதிவாகின்றன. சீனா மற்றும் தாய்வான் ஆகியன மீண்டும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளன.
எனவே இந்த பிரச்சினையை இலங்கை தொடர்ந்து புறக்கணித்தால், எதிர்காலத்தில் புதிய சுகாதார மற்றும் பொருளாதார சவால்களை நாடு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.