நாட்டில் தற்போதைய கோவிட் தொற்று நிலவரம்
நாட்டில் இன்று காலை வரை மொத்தம் 212 கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கோவிட்டை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 45 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் உள்ளூர்வாசிகள் என்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த எண்ணிக்கை 33 ஆக இருப்பதாகவும் மையம் தெரிவித்துள்ளது.
களுத்துறையில் இருந்து 32, கம்பஹாவிலிருந்து 31 மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து 71 கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து இன்று காலை வரை நாட்டிற்குள் மொத்தமாக கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,948 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், 3,033 கோவிட் நோயாளிகள் இன்னும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam