மீண்டுமொரு கோவிட் அலை..! இலங்கையில் நிலைமை மோசமாகும் - கடுமையான எச்சரிக்கை
இலங்கையில் மற்றொரு கோவிட் அலை உருவாகுமானால் நிலைமை மிகவும் மோசமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலவரப்படி எதிர்காலத்தில் நாட்டில் மற்றொரு கோவிட் அலை உருவாகுமானால், நிலைமை மிகவும் மோசமாகும்.
நிலைமை மோசமாகக்கூடும்
நாட்டில் உள்ள மருந்துகள் மற்றும் அதிகாரிகளின் பற்றாக்குறையே அந்த நிலைமைக்கு முக்கிய காரணம். பல நாடுகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகின்றன.
இலங்கையில் மீண்டும் ஒரு தொற்றுநோய் நிலைமை உருவாகினால் அதனைக் கட்டுப்படுத்துவது கடினமாகும். சுகாதார சேவைகள் சரிவு, மருந்துகள் - மருத்துவமனை வசதிகள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றுடன் நிலைமை மோசமாகக்கூடும்.
இதன் காரணமாக, கோவிட் பரவினால் ஒரு துரதிஷ்டவசமான சூழ்நிலை உருவாகும். அவ்வாறான நிலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
