மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் மரணங்கள் 201ஆக அதிகரிப்பு - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 209 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 08மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் மரணங்கள் 201ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 300கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 05மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 2400கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டபோதிலும் கடந்த வாரத்தில் மட்டும் 2093கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 32பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகவும் 30வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 275000 தடுப்பூசிகள் பெறப்பட்டதுடன், அதில் 2690100தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
30வயதுக்கு மேற்பட்ட 92வீதமானவர்களுக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தடுப்பூசி 67622பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
30வயதுக்கு மேற்பட்ட 23வீதமானவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி அதிகளவில் நடமாடி வருவதாகவும் இது மாவட்டத்தினை இன்னும் பாதக நிலைக்குக் கொண்டு செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
