கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு!
நாட்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாரத்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பீடு செய்யும் போது தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 20 வீதத்தினாலும், மரணங்களின் எண்ணிக்கை 17 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வோர் மற்றும் ஒட்சிசன் தேவைப்பாடுடைய நோய் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
நோய்த் தொற்று உறுதியாகும் 60 முதல் 65 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப பிரிவு பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விபரங்களை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.



