எனது தாய்க்கு உரிய முறையில் இறுதி கிரியைகள் செய்ய முடியவில்லை! நடிகை காயத்ரி டயஸ்
தனது தாய் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்ததாக நடிகை காயத்ரி டயஸ் தெரிவத்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்த தனது தாயின் உடல் அணிந்திருந்த ஆடையுடன் சில மணி நேரத்தில் தகனம் செய்தவற்காக கொண்டு செல்லப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
தன்னை பெற்ற தாயாருக்கு உரிய முறையில் இறுதி கிரியைகளை செய்ய முடியாது போனது குறித்து கடும் வேதனையடைவதாகவும் காயத்ரி டயஸ் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை கூறியுள்ளார்.
மரணத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸிடம் இருந்து கவனமாக இருக்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் தமது அன்புக்குரியவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாக இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காயத்ரி டயஸ் மேலும் தெரிவிக்கையில்,
எனது தாய் கடந்த 13 ஆம் திகதி கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தார் அவருக்கு இருதய நோய் இருந்தது மூச்சு திணறல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
படிப்படியாக குணமடைந்து வந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனது தாய் தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்தார்.
தகனம் செய்வதற்காக சில மணி நேரத்திற்குள் உடலை எடுத்துச் சென்றனர். எனது தாயாருக்கு உரிய பிரியாவிடையை கொடுக்க முடியாமல் போனது என்னை வாட்டி வதைக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam